தமிழகம்

சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முல்லைவாசல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மஹா பெரியவாளின் திருவடி அடைந்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ​காஞ்சி மஹா பெரிய​வாளிடம் மிகுந்த பக்தி கொண்​டிருந்த முல்​லை​வாசல் டாக்​டர். கிருஷ்ண​மூர்த்தி சாஸ்​திரி​கள் நேற்று மகாஸ்​வாமி​யின் திரு​வடிகளை அடைந்​தார். அவருக்கு வயது 81.

மஹாமஹோ​பாத்​யாய, வேத பாஷ்ய பிதாமஹர், சாஸ்த்ர ரத்​னாகர, ப்ரம்ம முல்​லை​வாசல் டாக்​டர் ஆர்​. கிருஷ்ண​மூர்த்தி சாஸ்​திரி​கள் தனது தந்​தை​யார் பிரம்ம ராஜகோ​பால கனபாடிகளின் வழி​காட்​டு​தலின்​கீழ் ‘வேத அத்​யயனம்’ பயின்​றவர்.

எஸ்​.ஆர்​.கிருஷ்ண மூர்த்தி சாஸ்​திரி​கள், போல​கம் ராம சாஸ்​திரி​கள் போன்ற சிறந்த அறிஞர்​களிடம் ‘மீ​மாம்​சை’, ‘வே​தாந்த சாஸ்​திரம்’ ஆகிய​வற்​றைக் கற்​றுத் தேர்ந்​தார்.

மயி​லாப்​பூரில் உள்ள சென்னை சம்​ஸ்​கிருதக் கல்லூரியில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக மாணவர்​களுக்கு வழி​காட்​டி​யாக இருந்து முதல்​வ​ராகப் பணி ஓய்வு பெற்​றார். இவர் சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தில் ‘இஷ்ட சித்தி விவரணம்’ (Ishta Siddhi Vivaranam) என்ற தலைப்​பில் முனை​வர் பட்​டம் பெற்​றார்.

பணி ஓய்​வுக்​குப் பிறகு, ‘பிரம்ம வித்யா பவனம்’ என்ற பெயரில் பாரம்​பரிய முறை​யில் வேதாந்​தக் கல்​வியை வழங்​கும் ஒரு பள்​ளியை நிறு​வி​னார். ‘முல்​லை​வாசல் ஹெரிடேஜ் டிரஸ்ட்’ (Mullaivasal Heritage Trust) அமைப்​பின் நிர்​வாக அறங்​காவல​ராக​வும் இருந்​தார்.

வேதங்​கள், உபநிடதங்​கள், யோகா, வானியல், தத்​துவ மரபு​கள் உள்​ளிட்​ட​வற்​றில் உள்ள சிறப்​பம்​சங்​களைக் கண்​டறிதல், பாது​காத்​தல், பரப்​புதல், நூல்​களை வெளி​யிடு​தல் ஆகியவை இந்த அமைப்​பின் முக்​கிய நோக்​கங்​களாகும்.

தனது அசாத்​திய வேத மற்​றும் சாஸ்​திர ஞானத்​துக்​காக மகா பெரிய​வாளிடம் இருந்து ‘வேத பாஷ்ய ரத்​னம்’ என்ற பட்​டத்​தை​யும், ‘அத்​வைத சித்தி ரத்​னாக​ரா’, ‘வே​தாந்த விபூஷணம்’ உள்​ளிட்ட பல்​வேறு உயரிய கவுர​வங்​களை​யும் பெற்​றுள்​ளார்.

முல்​லை​வாசல் டாக்​டர். ஆர்​. கிருஷ்ண​மூர்த்தி சாஸ்​திரி​கள் சென்னை மயி​லாப்​பூரில் உள்ள தமது வேத வித்யா பவனத்​தில், நேற்று காலை நித்ய அனுஷ்​டானங்​கள், மஹாளய தர்ப்​பணம் முதலிய​வற்றை முறை​யாக அனுஷ்டித்​து, நாற்​காலி​யில் அமர்ந்​த​படி மகா பெரிய​வாளின் திரு​வடிகளை அடைந்​தார்.

அவரைப் பற்றி நினை​வு​கூர்ந்த வேத​விற்​பன்​னர் டாக்​டர் மணி டிரா​விட் சாஸ்​திரி​கள், “பிரபல வேத விற்​பன்​னரும், சென்னை சம்​ஸ்​கிருதக் கல்​லூரி​யின் முன்​னாள் முதல்​வரு​மான முல்​லை​வாசல் ஆர்​.கிருஷ்ண​மூர்த்தி சாஸ்​திரி​களின் மறைவு ஆன்​மிக மற்​றும் கல்வி உலகுக்கு பேரிழப்​பாகும். அவருடைய அதி அற்​புத​மான உபன்​யாஸங்​கள், மாணவர்​களை நல்​வழி​யில்​, வேதநெறி​யில்​ வழிநடத்​தின” என்​றார்​.

SCROLL FOR NEXT