பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.
பெரம்பலூர்: தவெக ஆட்சி கவிழும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்பதற்கோ, திராவிட கட்சிகளுக்கு ஆதரவான பொதுவான வேட்பாளர்களை நிறுத்துவதற்கோ மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை. தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் தெரிவித்தது ஏற்புடையது அல்ல. மூத்த அரசியல்வாதி இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது.
ஜனநாயகத்தில் யாரும் எந்த கட்சியிலும் சேரலாம். ராஜினாமா செய்த அதிமுகஎம்எல்ஏக்கள் ஜனநாயகக் கட்சிகளை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.