தமிழகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

செய்திப்பிரிவு

கரூர்: கரூரில் ரூ.100 கோடி மதிப்​பிலான நில மோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கருக்கு கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் நேற்று குற்​றப்​பத்​திரிகை நகல் வழங்​கப்​பட்​டது.

கரூர் மாவட்​டம் வாங்​கலைச் சேர்ந்த பிர​காஷ் ரூ.100 கோடி மதிப்​புள்ள 22 ஏக்​கர் நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கருக்கு நெருக்​க​மானவர்​களின் பெயரில் பதிவு செய்​த​தாக, முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், அவரது தம்பி சேகர் உள்​ளிட்ட 17 பேர் மீது கரூர் நகர காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

பின்​னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. தலைமறை​வாக இருந்த ​விஜய​பாஸ்​கரை சிபிசிஐடி போலீ​ஸார் 2024 ஜூலை 16-ம் தேதி திருச்​சூரில் கைது செய்​தனர். பின்​னர் அவர் உள்​ளிட்​டோர் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர். இந்த வழக்கில் கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்தில், நேற்று ஆஜரான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரிடம் குற்​றப்​பத்​திரிகை நகல் வழங்​கப்​பட்​டது. அடுத்த விசா​ரணை ஜூலை 27-ம் தேதி நடை​பெற உள்​ளது.

SCROLL FOR NEXT