தமிழகம்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நுழைவாயில் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்

செய்திப்பிரிவு

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்​து​வ​மனை நுழை​வா​யில் கான்​கிரீட் இடிந்து விழுந்த விபத்​தில், தாய் மற்​றும் அவரது 7 வயது மகள் படு​காயமடைந்​தனர்.

சென்​னை, நீலாங்​கரை பகு​தி​யைச் சேர்ந்​தவர் ராம​சாமி (59). இவர் நுரை​யீரல் பாதிப்​பால், கடந்த 15-ம் தேதி சிகிச்​சைக்​காக ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு ராம​சாமியை பார்ப்​ப​தற்​காக அவருடைய மகள் சத்யா (37) தனது 7 வயது மகள் ஷிவானி​யுடன் ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனைக்கு வந்​தார்.

அவர்​கள் மருத்​து​வ​மனை வளாகத்​தின் நுழை​வா​யில் வழியே நடந்து சென்றபோது, எதிர்​பா​ராத​வித​மாக மேலிருந்த கான்​கிரீட் கூரை​யின் ஒரு பகுதி பெயர்ந்து அவர்​கள் தலை​யில் விழுந்​தது.

இதில் சத்​யா, சிறுமி ஷிவானி இரு​வரும் பலத்த காயம் அடைந்​தனர். கான்​கிரீட் தலை​யில் விழுந்த அதிர்ச்​சி​யில், சத்யா சம்பவ இடத்​திலேயே மயங்​கி​னார். இதைக்​கண்ட அங்​கிருந்​தவர்​கள், காயமடைந்த தாய் மற்​றும் மகளை மீட்டு ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனை​யிலேயே சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

படு​காயமடைந்த சத்​யா​வுக்கு தலை​யில் 7 தையல்​கள் போடப்​பட்​டுள்​ளன. சிறுமி ஷிவானிக்கு தலை​யில் பலத்த அடிபட்​ட​தில் ரத்​தக்​கசிவு ஏற்​பட்​டதையடுத்​து, அவர் மேல் சிகிச்​சைக்​காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்​து, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT