தமிழகம்

இபிஎஸ் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

மு.சக்தி

சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ”கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A.பாண்டியன் ஏற்பாட்டில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி (ஜூலை 11ம் தேதி) நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

புதிதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கழக இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எல்லேரி பிரபு, ஒன்றிய கழக செயலாளர் ரங்கசாமி, கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய அவை தலைவர் கோவிந்தராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் சௌந்தரராஜன், பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT