தமிழகம்

தமிழகத்தில் டிச. 15-ம் தேதி வரை மிதமான மழை

செய்திப்பிரிவு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று (டிச. 10) முதல் வரும் 15-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் நேற்று முன்​தினம் மழை பெய்​துள்​ளது. குறிப்​பாக, திருநெல்​வேலி, நாகப்​பட்​டினம், விருதுநகர், கன்​னி​யாகுமரி மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் லேசான மழை பதி​வாகி​யுள்​ளது.இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT