கோப்புப்படம்
சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனையில் கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியாகும்” என்றார்.
முன்னதாக, சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு கடந்த மாதம் செப்டம்பர் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதியானதில் இருந்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆனால், கடந்த 3 வாரங்களுக்கு மேலாக எந்த அறிக்கைகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.