தமிழகம்

முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா: ஆளுநர் அர்லேகர் ஏற்றுக் கொண்டார்

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லினின் ராஜி​னாமா கடிதத்தை ஆளுநர் அர்​லேகர் ஏற்​றுக்​கொண்​டார். அடுத்த ஆட்சி அமை​யும் வரை பதவி​யில் தொடரு​மாறு ஸ்டா​லினை அவர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் கடந்த ஏப்​.23-ம் தேதி நடை​பெற்​றது. கடந்த 4-ம் தேதி வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் விஜய்​யின் தவெக 108 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. திமுக கூட்​டணி 73 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்ற நிலை​யில், தொடர்ந்து 2-வது முறை ஆட்​சி​யமைக்​கும் வாய்ப்பை இழந்​து, பிர​தான எதிர்க்​கட்​சி​யாக மாறி​யுள்​ளது.

இந்​நிலை​யில், முதல்​வர் பதவியை மு.க.ஸ்​டா​லின் நேற்று ராஜி​னாமா செய்​தார். முதல்​வர் மற்​றும் அமைச்​சர்​களின் ராஜி​னாமா கடிதத்தை ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகருக்கு அனுப்பி வைத்​தார். இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், ‘முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​களின் ராஜி​னா​மாவை ஆளுநர் ஏற்​றுக்​கொண்​டார். மாற்று ஏற்​பாடு​கள் செய்​யும் வரை பதவி​யில் தொடரு​மாறு ஸ்டா​லினை ஆளுநர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT