லண்டன் புறப்பட்டுச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் உற்சாகத்துடன் வழிஅனுப்பி வைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

 
தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் பயணம்: ஜூலை 18-ம் தேதி திரும்புவார் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​தி​முக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இரு​வார​கால சுற்​றுப்​பயண​மாக நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினின் பேரனும், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லினின் மகனு​மான இன்​பநி​தி, லண்​டன் மான்​செஸ்​டர் நகரில் உள்ள பல்​கலைக்​கழகத்​தில் விளை​யாட்டு மேம்​பாடு தொடர்​பான பட்​டப்​படிப்பை முடித்​துள்​ளார். இதையடுத்து பல்​கலை. பட்​டமளிப்பு விழா​வில் இன்​பநிதி பட்​டம் பெறுகிறார். அந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று, பட்​டம் வாங்​கும் இன்​பநி​தியை வாழ்த்​து​வதற்​காக, ஸ்டா​லின் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார்.

இதற்​காக ஸ்டா​லின், காலை 8.15 மணி​யள​வில் சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தார். அவரை திமுக இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, துணைப் பொதுச் செய​லா​ளர் ஆ.ராசா உள்​ளிட்ட திமுக கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் ஏராள​மானோர் வழியனுப்பி வைத்​தனர்.

அதைத்​தொடர்ந்து, நேற்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் மூல​மாக சென்​னை​யில் இருந்​து, துபாய் வழி​யாக ஸ்டா​லின் லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டா​லினும் சென்​றுள்​ளார். லண்​டனில் சில நாட்​கள் தங்கி ஓய்​வெடுத்​து​ விட்​டு, ஜூலை 18-ம் தேதி சென்னை திரும்​பு​வார்​ என்​று கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT