திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய்
கோப்புப் படங்கள்
சென்னை: “விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது ஈகோ பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு ஜீரோ அக்கவுன்டபிளிட்டியுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்” என்று முதல்வர் விஜய்ய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குறுவை போச்சு, சம்பாவும் கருகுது, சர்வைவல் மோடில் தவிக்கும் விவசாயிகளுக்கு, சைலைன்ட் மோடில் உள்ள முதல்வரின் பதில் என்ன?
காவிரியில் 11 டிஎம்சி தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி. நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு. இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்.
காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி எப்போது?
தமிழக முதல்வரே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள். தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது ஈகோ பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு ஜீரோ அக்கவுன்டபிளிட்டியுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.