அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக மின் கட்டணம் கணக்கீடு தொடர்பாக 3.70 லட்சம் பேர் புகார் அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை நம்பிச் சொல்லியுள்ளார். மக்களை குழப்பும் விதமாக மு.க.ஸ்டாலின், வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களை தெரிவித்துள்ளார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதம் சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 3 மடங்கு மின் கட்டணம் அதிகரித்திருந்தது. நடப்பு ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதம் 9.60 லட்சம் பேருக்குத்தான் கட்டணம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதலாக மின் கட்டணம் கணக்கீடு தொடர்பாக 3.70 லட்சம் பேர் புகார் அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை நம்பிச் சொல்லியுள்ளார். மக்களை குழப்பும் விதமாக மு.க.ஸ்டாலின், வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை செய்து வருகிறார்; இந்த பிரச்சினையில் தெளிவாக உள்ளோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில்தான் இருந்தனர்.
தற்போது, அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக இப்படி செய்கிறதா எனத் தெரியவில்லை. மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் தரப்பிலிருந்து ஒரு வாரத்துக்குள் தேவையான முடிவுகள் அறிவிக்கப்படும். காவேரியை வைத்துதான் கர்நாடகா அரசியல் செய்கிறது.
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது தொடர்பாக இதுவரை அலுவல் ரீதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.