தமிழகம்

திருச்சியில் இளைஞருடன் தங்கியிருந்த சிறுமி உயிரிழப்பு: போதை ஊசி காரணமா என விசாரணை

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி அரியமங்​கலம் உக்​கடை பகு​தி​யைச் சேர்ந்​தவர் சதாம் உசேன் (19). இவருக்​கு 17 வயது சிறுமி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வருக்கும் போதை ஊசி போடும் பழக்​கம் இருப்பதாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், இவர்​கள் இரு​வரும் தம்​பதி என தெரி​வித்து நேற்று முன்​தினம் மத்​திய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் விடு​தியில் அறை எடுத்து தங்​கி​யுள்ளனர். பின்​னர், நேற்று மாலை அறை​யில் இருந்து பதற்​றத்​துடன் வெளியே வந்த சதாம் உசேன், தனது மனைவி கட்​டிலில் இருந்து கீழே விழுந்து மயங்​கி​விட்​டார் என தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, அந்​தச் சிறுமியை திருச்சி அரசு மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், சிறுமி உயி​ரிழந்​து​விட்​டதாக தெரி​வித்​தனர். தகவலறிந்த கன்​டோன்​மென்ட் போலீ​ஸார் உடலை கைப்​பற்றினர். விடு​தியில் சோதனை நடத்​தி​ய​போது, போதை மாத்​திரைகள் கைப்​பற்​றப்​பட்​டன. போலீ​ஸார் வழக்​குப் பதிந்து, சதாம் உசேனிடம் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT