மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் முன்னிலையில் அறங்காவலர் குழுத் தலைவராக நேற்று பொறுப்பேற்ற ருக்மணி பழனிவேல்ராஜன்.

 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் தலைவராக அமைச்சர் தாயார் தேர்வு

செய்திப்பிரிவு

மதுரை: மீ​னாட்சி அம்​மன் கோயில் அறங்​காவலர் குழுத் தலை​வ​ராக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் தாயார் ருக்​மணி பழனிவேல்​ராஜன் நேற்று மீண்​டும் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் தக்​கா​ராக கரு​முத்து தி. கண்​ணன் 18 ஆண்​டு​கள் பதவி வகித்​தார். இவர் 2023 மே 23-ம் தேதி கால​மா​னார். இதனால் கோயில் தக்​கா​ராக அறநிலை​யத் துறை மண்டல இணை ஆணை​யர் பொறுப்​பேற்​றார். தொடர்ந்​து, 2023 நவ. 6-ல் அறங்​காவலர் குழு உறுப்​பினர்​களாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தாயார் ருக்​மணி பழனிவேல்​ராஜன், மாநக​ராட்சி முன்​னாள் உறுப்​பினர் து.சுப்​புலட்​சுமி, தொழில​திபர் பி.கே.எம்​.செல்​லை​யா, டாக்​டர் மு.சீனி​வாசன், உயர் நீதி​மன்ற அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் அன்​புநி​தி​யின் மனைவி எஸ்​.மீனா ஆகிய 5 பேர் நியமிக்​கப்​பட்​டனர்.

இவர்​கள் 2023 டிச.1-ல் அறங்​காவலர் உறுப்​பின​ராக பதவி​யேற்​றனர். பின்​னர், அறங்​காவலர் குழுத் தலை​வ​ராக ருக்​மணி பழனிவேல்​ராஜன் 2023 டிச.22-ல் பதவி​யேற்​றார். இவர்​களது பதவிக்​காலம் 2025 டிசம்​பரில் முடிந்​தது.

இந்​நிலை​யில், தமிழக அரசு ஏற்​கெனவே இருந்த அறங்​காவலர்​களையே மேலும் 2 ஆண்​டு​களுக்கு நீட்​டிப்பு செய்து 2025 டிச. 30-ல் உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், கோயில் அலு​வல​கத்​தில் நேற்று இணை ஆணை​யர் நா.சுரேஷ் முன்​னிலை​யில் அறங்​காவலர்​கள் பதவி​யேற்பு விழா நடை​பெற்​றது. இதில் 5 பேரும் அறங்​காவலர்​களாக பொறுப்​பேற்​றனர்.

பின்​னர், அறங்​காவலர் குழுத் தலை​வர் பதவிக்கு தேர்​தல் நடந்​தது. இதில் அமைச்​சரின் தாயார் ருக்​மணி பழனிவேல்​ராஜன் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அவருக்கு அறங்​காவலர்​கள் மற்​றும் கோயில் நிர்​வாகத்​தினர்​ வாழ்த்​து தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT