தமிழகம்

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என நினைவூட்டுகிறேன்: திமுக எம்எல்ஏக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: எலும்​பு​கள் எல்​லோருக்​கும் உண்டு என்​பதை நினை​வுபடுத்த விரும்​பு​கிறோம் என, திமுக எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன் பேச்​சுக்​கு, அமைச்​சர் வன்னியரசு பதிலடி கொடுத்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட சமூகவலைத்​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சட்​டப்​பேர​வைக்​குள் வைத்து தமிழகத்​தின் முதல்​வர் விஜ​யின் எலும்​பு​களை உடைப்​பேன் என்று, வன்​முறையை தூண்​டும் வகை​யில் விளாத்​தி​க்குளம் திமுக எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன் பேசி​யுள்​ளார்.

ஏற்​க​னவே, முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதல்​வர் குறித்து அவதூறாக​வும், ஆபாச​மாக​வும் பேசுவதை வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். இவர்​கள் மட்​டுமல்ல, பலரும் மிக மோச​மான தாக்​குதலை தொடுத்து வரு​கின்​றனர்.

மக்​களுக்​காக சேவை​யாற்​றும் தளமாக அரசி​யல் களத்தை பார்க்​காமல், ஆட்சி அதி​காரத்தை தனி​நபர் வளர்ச்​சிக்​கான வாய்ப்​பாக கருதி வந்​த​தால், தோல்​வி​யின் விரக்​தி​யில் இவ்​வாறு அநாகரி​க​மாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இத்​தகைய போக்கு கடும் கண்​டனத்​திற்​குரியது.

சட்​டப்​பேர​வைக்​குள் முதல்​வருக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வோம் என்று மார்க்​கண்​டேயன் பேசி​யுள்ள நிலை​யில், அவர மீது சட்​டப்​பேரவை தலை​வர் உரிய நடவடிக்​கையை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறோம். எலும்​பு​கள் எல்​லோருக்​கும் உண்டு என்​பதை தான் நினை​வுபடுத்த விரும்​பு​கிறோம். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT