அமைச்சர் செங்கோட்டையன் 

 

கோப்புப் படம்

தமிழகம்

“தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்கத் தயார்” - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழினி

கோபிசெட்டிபாளையம்: “தவெக எம்எல்ஏ-க்களுடன் நேற்று முதல்வர் நடத்திய ஆலோசனையில் எம்எல்ஏ-க்களிடம் எந்தக் கடிதமும் வாங்கப்படவில்லை. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நினைத்தால் அதையும் சந்திக்கத் தயார்,” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நினைத்தால் அதையும் சந்திக்கத் தயார். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள்தான் (ஊடகங்கள்) இப்படிச் சொல்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கான காலம் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்" என்று கூறினார்.

பின்னர், “தவெக எம்எல்ஏக்களிடம் கடிதம் வாங்கப்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பப் பட்டபோது, “ஒவ்வொரு ஆட்சி மாறும்போது சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுவது, அங்கே என்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டறிந்து கொள்வது வழக்கம்தான். தவெக எம்எல்ஏ-க்களுடன் நேற்று முதல்வர் நடத்திய ஆலோசனையில் எம்எல்ஏ-க்களிடம் எந்தக் கடிதமும் வாங்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்​கள் நிறைவடைந்​துள்​ளன. கடந்த மே 13-ம் தேதி சட்​டப்​பேரவை​யில் வாக்​கெடுப்​பின் மூலம் காங்​கிரஸ், விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்​பான்​மையை நிரூபித்​தது. இந்​நிலை​யில் கடந்த சில மாதங்​களாகத் தமிழகத்​தில் நில​வும் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை, மின் வெட்டு, விலை​வாசி உயர்வு போன்ற பிரச்​சினைகள் ஆட்​சிக்​குச் சவாலாக இருந்து வரு​கின்​றன.

இந்நிலையில், தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய் தலை​மையில் நேற்று மாமல்​லபுரத்​தில் உள்ள தனியார் சொகுசு விடுதி​யில் எம்​எல்​ஏக்​கள் ஆலோ​சனை கூட்​டம் மாலை 4.10 மணிக்கு நடை​பெற்​றது. அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா, செங்​கோட்​டையன், நிர்​மல் குமார் ஆகியோர் முன்​னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில், தவெக எம்எல்ஏக்களிடம் கடிதம் வாங்கப்பட்டதாக தகவல்கள் எழுந்த நிலையில், அதனை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்றும் ஆலோசனை:

இதற்கிடையில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் (நவ.12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் கார்த்திக், டிஜிபி-யான மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி-யான அஸ்ரா கர்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT