அமைச்சர் ஷாஜகான்

 
தமிழகம்

‘லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி’ - 60 ஆண்டுகளாக தவித்த மக்களின் ஆவல் நிறைவேறியுள்ளதாக அமைச்சர் பெருமிதம்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என 60 ஆண்டுகளாக மக்கள் ஏங்கித் தவித்த ஆவலை நிறைவேற்றக்கூடிய வகையிலேயே இந்த ஆட்சி அமைந்திருக்கிறது என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தால், ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்து போயிருக்கிறது. தமிழகத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை தவெக அரசு தொடங்கியிருக்கிறது.

ஒரு நூலகத்துக்கு வாங்கக்கூடிய புத்தகத்தில்கூட ஊழல் என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள், வரலாற்று ஆய்வுகள் குறித்து படிப்பவர்கள் பயன்படுத்தும் நூலகத்திலேயே இதுபோன்று நடந்திருப்பது வேதனை அளிக்கிறது.

புதிய அரசுக்கு இது தலை தீபாவளி. கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் ஏங்கித்தவித்த லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களுடைய ஆவல் நிறைவேற்றக்கூடிய வகையிலேயே இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT