அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்

 
தமிழகம்

கந்தசஷ்டி விழாவில் தமிழுக்கு முதன்மை இடம்: அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கந்​தசஷ்டி விழா​வில் அனைத்து முருகன் கோயில்​களில் தமிழுக்கு முதன்மை இடம் வழங்க வேண்​டும். முதி​யோர், கர்ப்​பி​ணிகள், மாற்​றுத் திறனாளி​கள் எளி​தில் தரிசனம் செய்ய தனி ஏற்​பாடு செய்ய வேண்​டும்’ என்று இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இது​குறித்து அதி​காரி​களுக்கு அவர் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: முருகன் கோயில்​களில் கந்​தசஷ்டி விழா​வின் அனைத்து நாட்​களி​லும் பக்​தர்​கள் நீண்​டநேரம் காத்​திருக்​காமல் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவை​யான ஏற்​பாடுகளைச் செய்ய வேண்​டும். மூத்த குடிமக்​கள், கர்ப்​பி​ணிகள் மற்​றும் மாற்​றுத் திறனாளி​கள் நீண்​டநேரம் காத்​திருக்​காமல் எளி​தில் தரிசனம் செய்​யத் தனி ஏற்​பாடு செய்ய வேண்​டும். இவர்​களுக்கு உதவுவதற்​காகப் போதிய தன்​னார்​வலர்​கள் மற்​றும் கோயில் பணி​யாளர்​களை நியமிக்க வேண்​டும்.

சூரசம்​ஹாரம் நடை​பெறும்: நாளில் எதிர்​பார்க்​கப்​படும் பக்​தர்​கள் கூட்​டத்​தைக் கருத்​தில்​கொண்டு விரிவான கூட்ட நெரிசல் மேலாண்​மைத் திட்​டம் தயாரிக்க வேண்​டும். தேவை​யான இடங்​களில் தடுப்​பு​கள், கண்​காணிப்பு கேம​ராக்​கள், அறி​விப்​புக் கரு​வி​கள் மற்​றும் வழிகாட்​டும் பல​கைகள் அமைக்க வேண்​டும்.

அனைத்து கோயில் பணி​யாளர்​களும், எந்​தச் சூழ்​நிலை​யிலும் பக்​தர்​களிடம் கடுமையாகப் பேசுவதோ, முறையற்ற வகை​யில் நடந்து கொள்​வதோ அனுமதிக்​கப்​படாது. அனைத்து முக்​கிய முருகன் கோயில்​களி​லும் ஓது​வார்​களைக் கொண்டு தமி​ழில் திருப்​பு​கழ், திரு​முறை, கந்​தசஷ்டி பாராயணம் நடத்த வேண்​டும்.

அனைத்து வழிபாட்டு நிகழ்ச்​சிகள், பூஜைகள் மற்​றும் விழா நிகழ்​வு​களி​லும் தமிழுக்கு முதன்​மையான இடம் வழங்​கப்​பட வேண்​டும். கோயில் ஒலிபெருக்​கி​களில் திருப்​பு​கழ், தேவாரம், திரு​முறை மற்​றும் முருக பக்​திப் பாடல்​களை ஒலிபரப்ப ஏற்​பாடு செய்ய வேண்​டும். பக்​தர்​களின் வசதி, பாது​காப்பு, மரியாதை மற்​றும் தமிழ் வழிபாடு ஆகிய​வற்​றில் எந்​த​வித​மான குறைபாடுகளும் இருக்​கக் கூடாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT