தமிழகம்

தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு குறித்து விரைவில் சுமுக முடிவு: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தூய்மைப் பணி​யாளர்​களுக்​கான ஊதிய உயர்வு குறித்து விரை​வில் சுமுக முடிவு காணப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று தூய்​மைப் பணி​யாளர்​கள் தொடர்​பான கவன ஈர்ப்பு தீர்​மானத்தை இந்​திய கம்​யூனிஸ்ட் உறுப்​பினர் டி.​ராமச்​சந்​திரன் கொண்டு வந்​தார்.

அப்​போது, பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் பேசி​ய​தாவது: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

அவர்​கள் போராடு​வதற்கு ரிப்​பன் மாளி​கை​யில் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. எக்​காரணம் கொண்​டும், அவர்​கள் மீது பலப்​பிரயோகம் செய்​யக்​கூ​டாது என காவலர்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

போராட்​டம் தொடர்​பாக அரசு சார்​பில் 2 முறை பேச்​சு​ வார்த்தை நடத்​தப்​பட்​டுள்​ளது. பணி​யின்​போது உயி​ரிழந்த தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இழப்​பீடு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில் சம்​பந்​தப்​பட்ட வாரிசு​தா​ரர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இது​வரை 93 உடை மாற்​றும் அறை​களு​டன் கூடிய கழிப்​பறை​கள் நிர்​மாணிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 107 இடங்​கள் கண்​டறியப்​பட்டு செப்​.15-க்​குள் வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். முகக்​கவசம், கையுறை​கள் வழங்​கப்​படும்.

உணவுக்​குப் பதிலாக உணவுப்​படி வழங்​கு​வதற்கு கோப்​பு​கள் தயாரிக்​கப்​பட்​டு, அரசின் பரிசீலனை​யில் உள்​ளது. தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான ஊதி​யம் நாளொன்​றுக்கு ரூ.762 ஆக இருந்த நிலை​யில், அதை ரூ.832 ஆக உயர்த்​து​வது தொடர்​பாக சுமுக​மான முடிவு எடுக்​கப்​படும்.

இரண்டு ஆண்​டுக்கு ஒரு​முறை ஒரு நபருக்கு 4 சீருடை வழங்​கப்​படும். 450 புதிய பேட்​டரி 3 சக்கர வாக​னங்​கள் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். டிஜிட்​டல் வருகை - புறப்​பாடு பதிவு முறைக்​குப் பதிலாக மீண்​டும் வரு​கைப் பதிவேடு முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வார விடு​முறை, மகப்​பேறு காலங்​களில் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு தொடர்​பாக துறை​சார்ந்த அதி​காரி​களு​டன் கலந்​துபேசி முடிவு எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT