அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: “சட்டப்பேரவை தொடர்பான நேரலை சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் உள்ளே அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டப்பேரவை தொடர்பான நேரலை சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் உள்ளே அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வெளியே ரெஸ்ட் ரூமுக்கு வந்தப்போதுதான் நேரலை ஒளிபரப்பாகவில்லை என சொன்னார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, இனி வரும் நாட்களில் நேரலை செய்யப்படும்.
வெளியில் காட்டவே முடியாத நிலை ஏற்பட்டால், அதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம். மக்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்பதால், மோசமான மற்றும் ஆபாசமான வார்த்தைகள் வரும்போது, இது போன்று முடிவெடுக்கலாம். மத்தப்படி எல்லாம் நன்றாக தான் நடந்தது. இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
பின்னர், ராயபுரம் எல்எல்ஏ அடிக்க பாய்ந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் எங்கே அடிக்க பாய்ந்தார்? அவர் பின்னாடி இருந்ததால், என்ன நடக்கிறது என தெரியாமல் எழுந்து நின்று பார்த்தார். வன்முறை எல்லாம் நடக்கவில்லை; அனைத்தும் நன்றாகவே சென்றது” என்று அவர் கூறினார்.