தமிழகம்

263 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அடையாள அட்டை: அமைச்சர் ராஜேஷ் குமார் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பதிவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி 8 தொகுதிகளாக நடத்தப்பட்டது.

பயிற்சி நிறைவுற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட 263 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

மேலும், சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா துறை இயக்குநர் ஜெயசீலன், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் சேக் மன்சூர் மற்றும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT