தமிழகம்

உடற்கல்வி இயக்குநர் காலியிடம் நிரப்பப்படும்: அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாடு குறித்து அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை கல்​லூரி​களில் காலி​யாக​வுள்ள உடற்கல்வி இயக்​குநர் பணி​யிடங்​களை நிரப்ப உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார்.

அரசு கல்​லூரி​களில் விளை​யாட்டு மேம்​பாட்டு செயல்​பாடு​கள் குறித்து உடற்​கல்வி இயக்​குநர்​களுக்​கான கூட்​டம் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் தலை​மை​யில் சென்னை பல்​கலைக்​கழக கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில் கல்​லூரி கல்வி இணை இயக்​குநர் (திட்​டம் மற்​றும் வளர்ச்​சி) சிந்​தியா செல்​வி, சென்னை மண்டல இணை இயக்​குநர் து.தங்​க​ராஜ், சென்னை பல்​கலைக்​கழக துணைவேந்​தர் ஒருங்​கிணைப்​புக்​குழு உறுப்​பினர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங், பதி​வாளர் ரீட்டா ஜான் ஆகியோ​ரும் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் பங்​கேற்ற உடற்​கல்வி இயக்​குநர்​கள் பல்​வேறு ஆலோ​சனை​களை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்​சர் விஸ்​வ​நாதன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மொத்​த​முள்ள அரசு கலை கல்​லூரி​கள் மற்​றும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் காலியாக உள்ள உடற்​கல்வி இயக்​குநர் பணி​யிடங்​கள் நிரப்பப்படும்.

விளை​யாட்​டுத் துறையை மேம்​படுத்த செயல்​திட்​டத்தை தயாரித்து முதல்​வரிடம் வழங்க உள்​ளோம். வெளி​நாடு​களில் நடை​பெறும் சர்​வ​தேச போட்​டிகளில் பங்​கேற்​கும் விளை​யாட்டு வீரர்​களுக்கு அரசு சார்​பில் விமான பயணச்​சீட்டு வழங்​கப்​படும். இவ்​வாறு பேசி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT