தமிழக மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரணங்கள் விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகியோருடன் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்துரையாடினார். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணிகள்: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

“இடைத்தரகர்​கள், முறை​கேடு​களுக்கு இடமில்லை”

செய்திப்பிரிவு

சென்னை: மின்​துறை​யில் தனி​நபர்​கள் அல்​லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கும் நடை​முறை இனி தொட​ராது. தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் வழங்​கப்​படும் என்று அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

மின்​துறை சார்ந்த விநி​யோக நிறு​வனங்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் ஒருங்​கிணைப்பு கூட்​டம் மின்​துறை அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் தலை​மை​யில் சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில், மின்​வாரி​யத்​துடன் தொடர்​புடைய ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள், மின் உபகரண விநி​யோகஸ்​தர்​கள், வழங்​குநர்​கள், கொள்​முதல் நிறு​வனங்​களைச் சேர்ந்​தவர்​களு​டன் விரி​வான கலந்​துரை​யாடல் நடை​பெற்​றது.

கூட்டத்தில், அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேசி​ய​தாவது: மின்​துறை​யின் ஒவ்​வொரு பிரி​விலும் தனித்​தனி குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, டிஜிட்​டல் போர்ட்​டல் மூல​மாக வெளிப்​படை​யான டெண்​டர் முறை அமல்​படுத்​தப்​படும். தகு​தி​யுள்ள அனை​வருக்​கும் சம வாய்ப்பு வழங்​கப்​படும். கடந்த ஆட்​சி​யில் தனி​நபர்​கள் அல்​லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கும் முறை இருந்​த​தாக ஒப்​பந்​தா​ரர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். அது இனி தொட​ராது.

இந்த ஆட்​சி​யில் இடைத் தரகர்​கள், முறை​கேடு​களுக்கு இடமில்​லை. இனிவரும் காலங்​களில் வெளிப்​படை​யான நிர்​வாகத்​தின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் வழங்​கப்​படும். இன்​னும் ஓராண்​டுக்​குள் மின்​துறை​யில் முழு​மை​யான சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, நஷ்டங்​களைக் குறைத்​து, லாபகர​மாக இயக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சிக்​குப் பிறகு, செய்​தி​யாளர்​களிடம் அவர் பேசி​ய​போது, “கோவை சிறுமி கொலை வழக்​கில் உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். மதுரை​யில் நடந்த கொலை சம்​பவத்​துக்கு 3 மணி நேரத்​தில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் முதலில் வீட்​டில் இருந்து வெளியே வர வேண்​டும். இன்​ன​மும் அவரது தந்​தை​யின் ஆட்சி நடப்​ப​தாக நினைத்​துக் கொண்​டிருக்​கிறார். ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்று மக்​கள் நினைத்​த​தால்​தான் கடைக்​கோடி கிராமங்​களி​லும், சென்னை கொளத்​தூரிலும்​கூட தவெக​வுக்கு வாக்​களித்​துள்​ளனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT