தமிழகம்

பட்டாசு தொழிலாளர் நலனை காப்பாற்றியது அரசு: பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பட்டாசு ஆலைகளில் தீவிர ஆய்வு மேற்​கொண்​டதன் மூலம் பட்​டாசு தொழிலா​ளர் நலனை தவெக அரசு காப்​பாற்​றி​யுள்​ளது என்று சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று திமுக எம்​எல்ஏ தங்​கம் தென்​னரசு பேசி​ய​தாவது:

தீபாவளிக்கு முன்பாக..

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் சட்​டத்​துக்கு உட்​பட்​டு, முறை​யான அனு​மதி பெற்று இயங்கி வரும் பட்​டாசு ஆலைகள், விற்​பனை நிலை​யங்​களில் தீவிர ஆய்வு என்ற பெயரில் நடத்​தப்​படும் சோதனை​களால் பட்​டாசுத் தொழிற்​சாலைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

தீபாவளி நெருங்​கும் நிலை​யில், இதுகுறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்​டும். தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா கூறிய​தாவது:

6 மாதங்களாக ஆய்வு

கடந்த ஜனவரி முதல் ஜூலை 13-ம் தேதி வரை 6 மாதங்​களாக இந்த ஆய்வு நடந்து வரு​கிறது. அங்கு ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பட்​டாசு தொழிற்​சாலைகள் உள்​ளன. தவெக அரசு அமைந்த பிறகு தொடர்ச்​சி​யாக 4-5 விபத்​துகள் நேரிட்​டன. அதனால்​தான் தீவிர ஆய்வு நடத்​தப்​பட்​டது.

இதில் 177 பட்​டாசு ஆலைகளில் விதி​மீறல்​கள் கண்​டறியப்​பட்​டு, உடனடி​யாக ஆய்​வுக்கு உட்படுத்தி ஜூலை 11-ம் தேதிக்கு முன்பு சரிசெய்ய வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டது.

அதன் பிறகு, 49 நிறு​வனங்​கள் மீண்​டும் திறக்க மாவட்ட நிர்​வாகம் அனு​மதி வழங்​கியது. தொழில​கப் பாது​காப்பு இயக்​குநரகம் சார்​பில் 120 நிறு​வனங்​களும் குறை​பாடு​களை சரிசெய்​துள்​ள​தாக தெரி​வித்து மீண்​டும் இயக்க அனு​ம​திக்​கப்​பட்​டது.

இதன்​மூலம் பட்​டாசுத் தொழிலா​ளர்​கள் நலனை தவெக அரசு காப்​பாற்​றி​யுள்​ளது. இதனால், பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக மட்டுமின்றி மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இவ்​வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT