“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 993 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். த.வேலு எம்எல்ஏ, நல்லி குப்புசாமி, கல்லூரி செயலாளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்வர் எஸ்.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
தமிழகம்

அரசு வழங்கும் மடிக்கணினியை மேற்படிப்பு, வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: ‘அரசு வழங்​கும் மடிக்கணினிகளை மேற்​படிப்​புக்​கும், வேலைக்​கும் மாணவர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்’ என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார்.

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவே​கானந்தா கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், ‘உல​கம் உங்​கள் கையில்’ திட்​டத்​தின்​கீழ் 993 மாணவர்​களுக்கு மடிக்கணினிகளை அமைச்​சர் கோவி.செழியன் வழங்​கி​னார்.

          

அப்​போது அவர் பேசி​யதாவது: உயர்​கல்வி மேம்​பாட்​டுக்​காக ‘நான் முதல்​வன்’, ‘புது​மைப்​பெண்’, ‘தமிழ் புதல்​வன்’, ‘உல​கம் உங்​கள் கையில் மடிக்கணினி திட்​டம்’ என பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

உலகள​வில் அனைத்து துறை​களி​லும் தமிழக மாணவர்​கள் சிறந்து விளங்க அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள இத்​திட்​டங்​களை மாணவர்​கள் முழு​மை​யாகப் பயன்​படுத்தி சாதனை​கள் படைத்து வரு​கின்​றனர்.

இக்​கல்​லூரி​யில் ஏற்​கெனவே, கடந்த மாதம் மூன்​றாம் ஆண்டு இளங்​கலை பயிலும் 1,068 மாணவர்​களுக்கு மடிக்கணினி வழங்​கப்​பட்​டது. தற்​போது இரண்​டாம் ஆண்டு இளங்​கலை பயிலும் 993 மாணவர்​களுக்கு மடிக்கணினி வழங்​கப்​படு​கிறது.

இந்​தக் கல்​லூரி​யில் அரசு திட்​டங்​கள் மூலம் முதல் தலை​முறை பட்​ட​தா​ரி​கள் 10 மாணவர்​கள், ‘தமிழ் புதல்​வன்’ திட்​டத்​தில் 262 பேர், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் 564 பேர், பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் 643 மாணவர்​கள் பயன்​பெறு​வது மகிழ்ச்சி அளிக்​கிறது.

மாணவர்​கள் தங்​களுக்கு வழங்​கப்​படும் மடிக்கணினிகளை மேற்​படிப்​புக்​கும், வேலை​வாய்ப்​புக்​கும் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார். விழா​வில், கல்​லூரி​யின் செய​லா​ளர் சுவாமி தி​யான​காமி​யானந்​தா, முதல்​வர் எஸ்​.குமரேசன் மற்​றும் பேராசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT