முதல்வர் விஜய் மேடையில் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: “நாட்டின் விடிவெள்ளியாக முதல்வர் விஜய் திகழ்கிறார். நாங்கள் சொல்லவில்லை; உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள், முதல்வரின் நேர்மையைப் பார்த்து 'இந்தியாவில் இப்படி ஒரு முதல்வர் இல்லை' என் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார். அந்த மேடையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பேசுகையில், “தாராபுரம் மண், சாதாரண மண் அல்ல, உழைப்பின் மண்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள், சத்தியபாமா வெற்றி பெறுவது உறுதி. அவருக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் விஜய்க்கு செலுத்தும் வாக்குகள். தாராபுரத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், தாராபுரத்தின் வளர்ச்சிக்கும் சத்தியபாமாவை வெற்றி பெற செய்யுங்கள்” என்று பேசினார்.
இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “நாட்டின் விடிவெள்ளியாக முதல்வர் விஜய் திகழ்கிறார். நாங்கள் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள், முதல்வரின் நேர்மையைப் பார்த்து 'இந்தியாவில் இப்படி ஒரு முதல்வர் இல்லை' என் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பின்தங்கிய தாராபுரம் பகுதிக்கு, விரைவில் குடிநீர் திட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியா வியக்கும் தீர்ப்பாக, இரு தொகுதிகளின் முடிவு இருக்கும்” என்று பேசினார்.