ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் (தி.நகர்) சார்பில் எலியட்ஸ் கடற்கரையில் கண்தான விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

 
தமிழகம்

கண் தானத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: கரு​விழி தேவைப்​படும் நபர்​களின் எண்​ணிக்கை அதி​கம் இருப்​ப​தால், கண்​தானம் செய்​வோரின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும் என்று சுகா​தா​ரத்​ துறை அமைச்சர் அருண்​ராஜ் கேட்​டுக்​கொண்​டார்.

தேசிய கண்தான இரு​வார விழா ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்​டம்​பர் 8-ம் தேதி வரை கடைபிடிக்​கப்​படு​கிறது. இவ்​விழாவை முன்​னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்​து​வ​மனை, ரோட்​டரி ராஜன் கண் வங்​கி, ரோட்​டரி கிளப் ஆப் மெட்​ராஸ் (தி.நகர்) சார்​பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை​யில் கண்​தான விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் பேரணியை தொடங்கி வைத்​தார். ராஜன் கண் மருத்​து​வ​மனை தலை​வர் மற்​றும் மருத்​துவ இயக்​குநர் மோகன் ராஜன், ரோட்​டரி ராஜன் கண் வங்கி இயக்​குநர் சுஜாதா மோகன், ரோட்​டரி மாவட்ட கவர்னர் ராம் துவ்​வூரி, நடிகர் சாந்​தனு, கீர்த்தி சாந்​தனு உள்​ளிட்ட பலர் பேரணி​யில் கலந்து கொண்​டனர்.

அப்​போது, அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த பேரணி​யின் முக்​கிய நோக்​கம், பொது​மக்​களிடையே கண்​தானம் குறித்த விழிப்​புணர்வை அதி​கரிப்​பதும், கரு​விழி பாதிப்​பால் பார்​வை​யிழந்​தவர்​களுக்கு மீண்​டும் பார்வை கிடைக்க உதவும் வகை​யில் கண்​தானம் செய்​வதற்கு உறு​தி​மொழி அளிக்க மக்​களை ஊக்​கு​விப்​பதும் ஆகும்.

கண்​தானம் என்​பது ஒரு சிறந்த விஷ​யம். எத்​தனையோ நபர்​கள் கண்​பார்வை இல்​லாமல் இருக்​கி​றார்​கள். ஒரு​வர் கண்​தானம் வழங்​கு​வதன் மூலம் இரண்டு பேருக்கு நம்​மால் பார்​வையை வழங்க முடி​யும். மறைந்த இயக்​குநரும், திரைப்பட நடிகரு​மான பாக்​ய​ராஜ் கண்​தானம் செய்​தார்.

அதுபற்றி தகவல் தெரிந்த பிறகு, 600 பேர் கண்​தானம் செய்ய முன்​வந்​துள்​ளனர். கரு​விழி தேவைப்​படும் நபர்​களின் எண்​ணிக்கை அதி​கம் உள்​ளது. கண்​தானம் செய்​வோரின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.

டெங்கு காய்ச்​சல் தடுப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. டெங்கு கொசு ஒழிப்பு பணி​களில் பொது​மக்​களுக்​கும் பொறுப்பு இருக்​கிறது. டெங்கு காய்ச்​சல் கட்​டுப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

விளை​யாட்டு போட்​டி:

சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் அரங்​கம் அரு​கில் நேற்று நடந்த மனவளர்ச்சி குன்​றிய சிறப்பு குழந்​தைகளுக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகளை சுகா​தாரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் தொடங்கி வைத்​தார். போட்​டிகளில் பங்​கேற்ற சிறப்பு குழந்​தைகளை​யும், அவர்​களின் பெற்​றோரை​யும் பாராட்​டி​னார்.

அப்​போது, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இது​போன்ற விளை​யாட்​டுப் போட்​டிகளை அனைத்து மாவட்​டங்​களி​லும் நடத்த வேண்​டும். இது சிறப்பு குழந்​தைகளுக்கு பெரிய வாய்ப்​பாக அமை​யும். விளை​யாட்டு ஒன்​று​தான் அவர்​களுக்​குள் இருக்​கும் ஆற்​றலை சரி​யாக பயன்​படுத்த உதவும். அவர்​களு​டைய மனம் இதன் மூலம் மகிழ்​ச்சி அடைந்​து, புத்​துணர்வு பெறும்” என்​றார்.

SCROLL FOR NEXT