டிகேசிவகுமார், என்.ஆனந்த் (இடமிருந்து வலமாக)

 
தமிழகம்

“மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் சொல்வது போல் நடக்காது” - அமைச்சர் ஆனந்த்

என்.மாதவன்

திருச்சி: “மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவேன் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சொல்வது போல் ஒருபோதும் நடக்காது” என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் என். ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவேன் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் சொல்வது போல ஒருபோதும் நடக்காது. மேலும், மேகேதாட்டு அணை கட்ட பாஜக தலைவர்கள் ஆதரிப்பதாக அவர் கூறினாலும் அது நடக்காது” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT