தமிழகம்

மேட்டூர் அணைக்கு 881 கனஅடி நீர்வரத்து

செய்திப்பிரிவு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 881 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 836 கன அடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 881 கன அடி​யாக உயர்ந்​தது.

அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 11,000 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 400 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. நீர்​வரத்தை விட தண்​ணீ்ர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் நீர்​மட்​டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது.

அணை நீர்​மட்​டம் 107.49 அடியி​லிருந்து 106.82 அடி​யாக​வும், நீர் இருப்பு 74.89 டிஎம்​சியி​லிருந்து 73.96 டிஎம்​சி​யாக​வும் சரிந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 2 நாட்​களாக விநாடிக்கு 2,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 1,500 கனஅடி​யாக குறைந்​தது.

SCROLL FOR NEXT