தமிழகம்

சென்னையில் நல்லகண்ணுவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் நல்லகண்ணுவுக்கு மணிமண்​டபம் அமைக்க வேண்​டும் என தமிழக அரசை வலி​யுறுத்​தி, அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்ற மாநிலக்​குழு வலி​யுறுத்​தி​உள்ளது.

அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்ற மாநிலக்​குழு கூட்​டம் தி.நகரில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், முன்​னாள் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன், அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றத்​தின் மாநில செய​லா​ளர் கே.​பார​தி, மாநில தலை​வர் இரா.தமிழ்ப்​பெரு​மாள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மறைந்த மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு​வின் போராட்ட வரலாற்​றை​யும், தியாகத்​தை​யும் எடுத்​துச் சொல்​லும்​வித​மாக சென்​னை​யில் அவருக்கு தமிழக அரசு மணிமண்​டபம் அமைக்க வேண்​டும். மேகே​தாட்டு அணை திட்​டத்தை கர்​நாடக அரசு முற்​றி​லு​மாக கைவிட வேண்​டும்.

பாலியல் வன்​கொடுமை குற்​றங்​களில் ஈடு​படு​வோர் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களி​லும் பணி​யிடத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் தடுப்​புச் சட்​டத்தை கடுமை​யான முறை​யில் நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

தனிச் சட்டம்

பள்​ளி, கல்​லூரி வளாகங்​களுக்கு அருகே போதைப்​பொருள் கஞ்சா மற்​றும் தடைசெய்​யப்​பட்ட புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​வதை காவல்​துறை முழு​மை​யாக கண்​காணிக்க வேண்​டும்.

சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச் சட்​டத்தை தமிழக அரசு உடனே இயற்ற முன்வர வேண்​டும் என்பன உள்பட 8 தீர்​மானங்​கள் கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்​டன.

மேலும், பாலியல் வன்​கொடுமை, போதை கலாச்​சா​ரம், ஊழல் இல்​லாத, சாதி மதவெறியற்ற தமிழகத்தை உரு​வாக்​கு​வோம் என்ற வகை​யில் 1 கோடி பேர் கையெழுத்​திடும் இயக்​கம் ஜூலை 5 முதல் 25-ம் தேதி வரை 5 ஆயிரம் இடங்​களில் நடத்​த​வும் இக்​கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT