கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மற்றும் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை நேற்று பார்வையிட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

மேகேதாட்டுவில் அணை கட்டுமானத்துக்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள்: பி.ஆர்.பாண்டியன் தகவல்

செய்திப்பிரிவு

ஓசூர்: மேகே​தாட்​டு​வில் படிக்​கட்​டு, இரும்பு கம்​பிகள் நடப்​பட்டு அணை கட்​டு​மானத்​துக்​காக அந்த மாநில அரசு அடை​யாளப்​படுத்தி உள்​ள​தாக தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக மாநிலம் மேகே​தாட்​டு​வில், அந்த மாநில அரசு அணை கட்​டு​மானப் பணிக்​காக மேற்​கொண்​டுள்ள முன்​னேற்​பாடு​கள், இரும்​புக் கம்​பிகள், புதி​தாக அமைக்​கப்​பட்ட படிக்​கட்​டு​கள் உள்​ளிட்ட பணி​களை பி.ஆர்​.​பாண்​டியன் நேற்று பார்​வையிட்​டார். பின்​னர் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: கர்​நாடக மாநிலத்​தின் முக்​கிய சுற்​றுலாத் தலங்​களில் ஒன்​றான கனகபுரா சங்​கமத்​தில் அர்​காவதி ஆறும், காவிரி ஆறும் சங்​கமிக்​கின்​றன. சங்​கமத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வில் மேகே​தாட்டு அமைந்​துள்​ளது. உயர​மான இரு மலைக் குன்​றுகளுக்கு இடையே குறுகிய பாதை வழி​யாக, காவிரி தமிழக எல்​லைக்​குள் நுழை​யும் பகு​தி​யில் மேகே​தாட்டு அணையை கட்ட கர்​நாடக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

மலை அடி​வாரச் சாலை​யில் இருந்து சுமார் 150 அடி ஆழத்​தில் இருந்து ஆற்​றின் மட்​டத்​துக்​குச் செல்ல புதி​தாகப் படிக்​கட்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், அணை கட்​டு​மானத்​துக்​கான அளவீடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இரும்​புக் கம்​பிகள் நடப்​பட்​டுள்​ளன. அடர்ந்த வனப்​பகு​தி​யான இங்கு யானை​கள், புலிகள் உள்​ளிட்ட வனவிலங்​கு​களின் நடமாட்​டம் இருப்​ப​தால், இது​வரை சுற்​றுலாப் பயணி​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது, அணை கட்​டு​மான நடவடிக்​கையை நியாயப்​படுத்​தும் வகை​யில் சுற்​றுலாப் பயணி​களுக்கு அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக சிறப்​புப் பேருந்​துகளும் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த நடவடிக்​கைகள் அனைத்​தும் மேகே​தாட்​டில் அணை கட்​டு​மானப் பணிக்​காக கர்​நாடக அரசு முழு​மை​யாகத் தயா​ராக இருப்​பதை வெளிப்​படுத்​துகின்​றன. எனவே, மத்​திய அரசின் சுற்​றுச்​சூழல், வனத் துறை​கள் இணைந்து மேகே​தாட்டு அணை கட்​டு​மானத்தை தடுத்து நிறுத்த வேண்​டும்.

மேற்கு தொடர்ச்சி மலை வளத்​தைப் பாது​காக்க, பிரதமர் தலை​மை​யில் தொடர்​புடைய மாநில முதல்​வர்​கள் அடங்​கிய பாது​காப்​புக் குழுவை அமைக்க வேண்​டும். “மேகே​தாட்டு அணை கட்ட ஒரு செங்​கல்​லைக்​ கூட வைக்க அனு​ம​திக்க மாட்​டோம்” என்று சென்​னை​யில் இருந்து காங்​கிரஸ் கட்​சி​யினர் கூறு​வதை விட்​டு​விட்​டு, அணை கட்​டும் இடத்​தில் என்ன நடக்​கிறது என்​பதை அங்கு சென்று பார்​வை​யிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT