தமிழகம்

மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு: முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சிறப்புக்குழு

செய்திப்பிரிவு

அகஸ்தி​யமலை மற்​றும் மேகமலை புலிகள் காப்​பகப் பகுதி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வது மற்​றும் வன உரிமைச் சட்​டத்​தின் கீழ் பெறப்​படும் கோரிக்​கைகளைச் சரிபார்ப்​பது தொடர்​பான வழக்​கில், உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையில் சிறப்​புக்​குழுவை அமைத்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மேகமலை வனப்​பகுதி கடந்த 2009-ஆம் ஆண்டு வன உயி​ரின சரணாலய​மாக தமிழக அரசால் அதி​காரபூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது. அதை தொடர்ந்து அப்​பகுதி​யில் விவசாயம் செய்து வந்த மக்​கள், குடி​யிருந்த மக்​களை வனத்​தி​லிருது வெளியேறும்​படி வனத்​துறை​யினர் அறி​வுறுத்​தினர்.

இந்​நிலை​யில், நான்கு தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வாழ்ந்​து​வருபவர்​களை​யும், பரம்​பரையாக தங்​கி​யிருப்​பவர்​களை​யும் வெளியேற்​றும் நட​வடிக்​கையை ரத்து செய்​யக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. ஆனால் அந்த மனுக்​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதையடுத்து இந்த விவகாரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது

இந்த வழக்​கு​களை உச்​சநீதி​மன்​றம் விசா​ரித்து இடைக்​கால உத்​தரவு​களை பிறப்​பித்து வந்​தது. குறிப்​பாக வனப் பகுதி​களில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வது, மறு​வாழ்வு வழங்​கு​வது மற்​றும் சுற்​றுச்​சூழல் மறுசீரமைப்​புப் பணிகளை மேற்​கொள்ள வழி காட்​டுதல்​களை வழங்​கி​யிருந்​தது.

இதனையடுத்து, தமிழக அரசின் வரு​வாய்த் துறை மற்​றும் சமூக நீதித் துறை சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட பதில்​களை​யும், மத்​திய அதி​காரக் குழு​வின் அறிக்​கைகளை​யும் விரிவாக ஆராய்ந்து, உச்ச நீதி​மன்ற நீதிபதி சந்​தீப் மேத்தா பிறப்பித்த உத்​தரவு: மேகமலை வனப்​பகுதி​யில் இல​வம் பஞ்சு சாகுபடி செய்​யப்​படுவது குறித்த அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. திட்​ட​மிட்டு மேற்​கொள்​ளப்​படும் வணிகப் பயிர்​களின் சாகுபடி இயற்​கை​யாக விளை​யும் சிறு வன விளைபொருட்​களின் வரம்​புக்​குள் வராது.

வனப் பகுதிக்​குள் தற்​காலிகக் குடி​யிருப்​புடன் விவசாயம் செய்​பவர்​கள் மற்​றும் வன எல்​லைக்கு வெளியே வசித்​துக்​கொண்டு விவசாயம் செய்​பவர்​கள் ஆகிய இரு பிரி​வினரும் வன உரிமைச் சட்​டத்​தின் கீழ் நிவாரணம் பெற தகுதி​யற்​றவர்​கள், அவர்​கள் பரிசீலனை​யி​லிருந்து விலக்​கப்​பட வேண்​டும் அதேவேளை​யில் வன உரிமைச் சட்​டம், 2006-ன் பிரிவு 2ன் படி, வனப்​பகுதி​களில் பாரம்​பரிய​மாக வசிக்​கும் பழங்​குடி​யினர் அல்​லது இதர பாரம்​பரிய வனவாசிகள் மட்​டுமே வனப் பலன்​களைப் பெறத் தகுதி​யுடைய​வர்​கள்.

அதுபோல, வன உரிமைச் சட்​டம் தொடர்​பான கோரிக்​கைகளைச் சரிபார்க்க உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையில் சிறப்​புக்​குழு அமைக்​கப்​படுவ​தாகவும், இக்​குழு​வானது மேகமலை பகுதி​யில் உள்ள நபர்​களில் பழங்​குடி​யினர் யார்? பழங்​குடி​யினர் அல்​லாதவர் யார் என்ற விவரங்​களை​யும் ஆய்வு மேற்​கொள்​ளும்.

இக்​குழு​விற்கு மத்​திய அதி​காரக் குழு மற்​றும் தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாது​காவலர் ஆகியோர் உதவி செய்ய வேண்​டும். இந்​தக் குழு வழங்​கும் பரிசீலனைகளை சரிபார்த்து அதை சீலிட்ட கவரில் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சமர்ப்​பிக்க வேண்​டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்​. 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT