தமிழகம்

மாவோயிஸ்ட் சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் சான்றிதழ்களை விடுவிக்க கோரிய மருத்துவ மாணவியின் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: மருத்​து​வம் படித்த பிஹார் மாணவிக்கு மாவோ​யிஸ்ட் அமைப்பு சார்​பில் கல்விக் கட்​ட​ணம் செலுத்​தப்​பட்ட நிலை​யில், கல்வி சான்​றிதழ்​களை விடுவிக்க கல்​லூரி நிர்​வாகத்​துக்கு உத்​தர​விடக்​கோரி அந்த மாணவி தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​யில் பிஹாரைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் மருத்​து​வம் படித்​தார். இவருக்கு பிஹார் மாநிலத்​தில் செயல்​படும் மாவோ​யிஸ்ட் அமைப்​பில் இருந்து ரூ.1 கோடியே 13 லட்​சம் கல்விக் கட்​ட​ண​மாக பல்​வேறு தவணை​களில் செலுத்​தப்​பட்​டது.

இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​திய தேசிய புல​னாய்வு முகமை, அந்த தொகையை முடக்​கியது. மாணவிக்​காக மாவோ​யிஸ்ட் அமைப்​பிடம் கல்விக் கட்​ட​ணம் வசூலித்த சகோ​தரர் மற்​றும் உறவினர்​கள் மீது தேசிய பாது​காப்பு சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிவு செய்​தது.

இதனால் அந்த மாணவிக்கு கல்​விச் சான்​றிதழ்​களை வழங்க கல்​லூரி நிர்​வாகம் மறுத்​தது.தனக்​குரிய சான்​றிதழ்​களை வழங்க கல்​லூரி நிர்​வாகத்​துக்கு உத்​தர​விடக்​கோரி சம்​பந்​தப்​பட்ட மாணவி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிப​தி, மாண​வி​யின் கோரிக்​கையை ஏற்க மறுத்து மனுவை தள்​ளு​படி செய்​தார். அதை எதிர்த்து அந்த மாணவி மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மாணவி செலுத்த வேண்​டிய கல்விக் கட்​ட​ணம் தேசிய புல​னாய்வு முகமை​யால் முடக்​கப்​பட்​டுள்ள சூழலில் கல்​விச் சான்​றிதழ்​களை தடை​யின்றி வழங்​கும்​படி கல்​லூரி நிர்​வாகத்தை நிர்​பந்​திக்க முடி​யாது.

முடக்​கப்​பட்ட தொகையை விடுவிக்​கக்​கோரி மனு​தா​ரர் சம்​பந்​தப்​பட்ட சிறப்பு நீதி​மன்​றத்தை அணுகலாம், அல்​லது கல்விக் கட்​ட​ணத்தை மீண்​டும் செலுத்தி மருத்​துவ படிப்​புக்​கான சான்​றிதழ்​களை வழங்​கக் கோரலாம், எனக்​கூறி மேல்​முறை​யீட்டு வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT