சென்னை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் டிச.28-ம் தேதி நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தேர்தல் அறிவித்த பின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் டிச.28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட அறிக்கையில், ‘மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தாயகத்தில் நடைபெறுகிறது.பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 28-ம் தேதி காலை 10 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்ஐஆர் பணி, வைகோ நடைபயணம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.