வைகோ |கோப்புப் படம் 

 
தமிழகம்

“முதல்வர் விஜய்யை சிலர் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர்” - வைகோ கருத்து

இ.ஜெகநாதன்

சிவகங்கை: “முதல்வர் விஜய்யை சிலர் கிள்ளுகீரையாக நினைக்கின்றனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக் காலங்களிலும் அதிகளவில் குற்றங்கள் நடைபெற்றன. ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு எடுபிடியாக மாறியவர் பழனிசாமி. ஸ்டெர்லைட் ஆலைக்காக அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாக இருந்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினரைச் சந்திக்க முதல்வர் விஜயிடம் அனுமதி கேட்டும் சந்திக்கவில்லை. அவர்களிடம் ரூ.500 கோடி கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பர். ஆனால், ஆலையைத் திறக்க அனுமதிக்கவில்லை. இது ஒன்றே விஜய் ஆட்சியின் நேர்மைக்கு அத்தாட்சி

சிறையிலிருந்து தப்பியோரை எப்ஐஆர் போட்ட மை காய்வதற்குள் கைது செய்த போலீஸாரை பாராட்டுகிறேன். காவல் துறை இதற்கு மேல் என்ன செய்ய முடியும். ஆனால், தலைவர்கள் சிலர் சிறையிலிருந்து கைதிகள் தப்பிவிட்டதாக குரல் கொடுகின்றனர். கடந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்களுக்கு அவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.

முதல்வர் விஜய்யை கிள்ளுகீரையாக நினைக்கின்றனர். விஜய் ஆட்சி 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்கின்றனர். ஆனால், 5 ஆண்டுகளுக்கு அவரது ஆட்சிதான் இருக்கும். மீண்டும் அவர்தான் ஆட்சிக்கு வருவார். அரசு அலுவலகங்களில் ஊழல், லஞ்சம் இல்லை. இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து விஜய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்துவதாக சீமான் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சிலருக்கு மட்டுமே பதில் செல்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT