இடம்: செங்குன்றம் |  படம்: எஸ். சத்தியசீலன்

 
தமிழகம்

வட சென்னை, திருவள்ளூரில் கொட்டித் தீர்க்கும் கனமழை - எங்கெல்லாம் அதிகபட்ச மழைப் பதிவு?

தமிழினி

சென்னை: வட சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கனமழை அவ்வப்போது நீடித்து வருகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மணலி புதுநகரில் 24 செமீ, எண்ணூரில் 21 செமீ, விம்கோ நகரில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்தப் பகு​தி​களில் பல்​வேறு இடங்​களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

‘இன்று (டிச.4) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்: மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) 24 செ.மீ, எண்ணுார் AWS (திருவள்ளூர்) 21 செ.மீ, மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை) 20 செ.மீ, மண்டலம் 01 சுத்திவாக்கம் (சென்னை) 16, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மண்டலம் 02 மணலி புதுநகரம் (W15) (சென்னை) 13 செ.மீ, மண்டலம் 02 மணவி (W19) (சென்னை) 12 செ.மீ, திண்டிவனம் விழுப்புரம்) ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 07 மணலி (W21) (சென்னை) தலா 11 செ.மீ, பொன்னேரி திருவள்ளூர் 10 செ.மீ, சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி (WT2) (சென்னை), மண்டலம் 02 மணலி (W13) (சென்னை) தலா 9 செ.மீ, கங்கவல்லி (சேலம்) 8 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), புழல் ARG (திருவள்ளூர்), தழுதலை (பெரம்பலூர்), KCS மில் 1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

DSCL மடம்பூண்டி கள்ளக்குறிச்சி), விழுப்புரம் (விழுப்புரம்), மண்டலம் 03 புழல் (சென்னை), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி) பெரியகுளம் PTO (தேனி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர், மண்டலம் 35 பேசின்ப்ரிட்ஜ் (சென்னை), தோகமலை (களூரி), பெரம்பூர் (சென்னை), பஞ்சப்பட்டி (கரூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்,) வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பெரியகுளம் (தேனி), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்) வேப்பந்தட்டை ARG (பெரம்பலூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT