தமிழகம்

100 நாள் வேலை திட்டத்துக்கு ஜூன் 30-ல் முடிவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​பாஜக ஆட்​சி​யில் 100 நாள் வேலைத் திட்​டத்​துக்கு ஜூன் 30-ம் தேதி​யுடன் முடிவு கட்​டப்பட உள்​ள​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதக​மான சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தில் மத்​திய பாஜக ஆட்​சி​யாளர்​களுக்கு எப்​போதுமே அக்​கறை இல்​லை.

இந்த நிலை​யில், ‘விபி-ஜி​ராம்​ஜி’ என்ற புதிய திட்​டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

இத்​திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்​டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்​கள் மீது மத்​திய அரசு சுமத்​தி​யுள்​ளது.

எந்​தெந்த மாநில அரசுகள் இத்​திட்​டத்தை அமல்​படுத்​தும் என்​பது ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு​தான் தெரிய​வரும்.

கிராமப்​புற மக்​களுக்கு எதி​ராக மத்​திய பாஜக அரசு மேற்​கொண்ட மிக கொடூர​மான நடவடிக்கை இது. பாஜக ஆட்​சி​யில் 100 நாள் வேலைத் திட்​டத்​துக்கு ஜூன் 30-ம் தேதி​யுடன் முடிவு கட்​டப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT