சென்னை: தமிழக கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் டி.கே.பிரபு தனக்கு எதிராக யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகக் கூறி ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி, உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், அமைச்சர் டி.கே. பிரபு குறித்து அவதூறான கருத்துகளை வெளியிடக்கூடாது என யூடியூபர் மாரிதாஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.