முன்னாள் துணை மேயர் பி.எம் மன்னன்

 
தமிழகம்

அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை

குதிரை பேர வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்​வேன் என கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: ‘என் மீதான குதிரை பேர வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்​வேன்’ என்று முன்​னாள் துணை மேயர் பி.எம். மன்​னன் தெரி​வித்​தார்.

தவெக அரசுக்கு எதிராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானத்​தில் வாக்​களிக்க அதிமுகவைச் சேர்ந்த நிர்​வாகி ஒரு​வர் இரு தவணைகளில் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசிய​தாக சில நாட்​களுக்கு முன்பு மதுரை மத்​திய தொகுதி தவெக எம்​எல்ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபா குற்​றம் சாட்​டினார்.

இந்​நிலை​யில் முஸ்தபா தரப்​பில் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாநகர மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், மாநக​ராட்சி முன்​னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செய​லா​ள​ரு​மான பி.எம்.மன்​னன் மீது 3 பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்து நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

அவரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஜோசப் ஜாய் முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தினர். போலீஸ் சம்​மன் மூலம் நவம்​பர் 7-ம் தேதி விசா​ரணைக்கு அழைத்​து​விட்டு முன்​கூட்​டியே கைது செய்​தது ஏன் என்று கேள்வி எழுப்​பிய நீதிபதி, பி.எம்.மன்​னனை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்​தர​விட்​டார். அதேநேரம், சம்​மனில் குறிப்​பிட்​டபடி போலீ​ஸாரிடம் விசா​ரணைக்கு ஆஜராக வேண்​டும் என நீதிபதி அறி​வுறுத்​தினார்.

அதன்​படி, மத்​திய குற்​றப்​ பி​ரிவு காவல் நிலை​யத்​தில் நேற்று காலை 10 மணி​யளவில் பி.எம்.மன்​னன் தனது வழக்​கறிஞர்​கள், ஆதர​வாளர்​களு​டன் வந்து ஆஜரானார். காவல் உதவி ஆணை​யர் ஆரோக்​கியராஜ் 5 மணி நேரம் அவரிடம் விசா​ரணை நடத்​தினார். எம்​எல்ஏ உதவியாளர் கனிராஜ் தெரி​வித்த சில தகவல்​களின் அடிப்​படை​யில் மன்​னனிடம் போலீ​ஸார் கேள்​வி​களை கேட்​டனர்.

விசா​ரணை முடிந்து காவல் நிலை​யத்​தி​லிருந்து வெளியே வந்த பி.எம்.மன்​னன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “போலீ​ஸார் கேட்ட அனைத்து கேள்​வி​களுக்​கும் முறை​யாக பதிலளித்​தேன். எப்​போது விசா​ரணைக்கு அழைத்​தா​லும் ஆஜராக தயார் என தெரி​வித்​துள்​ளேன்.

என் மீது பதிவு செய்​யப்​பட்ட இவ்​வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்​வேன். ஏற்​கெனவே, நான் அரசி​யல் ரீதி​யான அனைத்து வழக்​கு​களை​யும் எதிர்​கொண்​ட​வன் என்ற அடிப்​படை​யில், இவ்​வழக்​கையும் எதிர்​கொள்​வேன்” என்று கூறினார். நீங்​கள் பேசி​யதற்கு ஆடியோ ஆதா​ரம் உள்​ள​தாக முஸ்தபா கூறுகிறாரே என்ற கேள்​விக்கு, ‘அவரிடமே கேட்டு தெரிந்து கொள்​ளுங்​கள்’ என்று பி.எம்.மன்​னன் பதிலளித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT