தமிழகம்

ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற மாணிக்கம் தாகூர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் வெளி​யிட்ட அறிக்​கை​: ‘மத்​திய அரசு - ரோஹித் நாதன்’ வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் கடந்த மார்ச் 11, 2026 அன்று தீர்ப்​பளித்​துள்​ளது.

அதில், "1993-ம் ஆண்டு அலு​வல​கக் குறிப்​பாணை​யின்​படி ஓபிசி பிரி​வினருக்​கான ‘கிரீமிலேயர்’ வரம்​பைக் கணக்​கிடு​வ​தில் பெற்​றோரின் சம்பள வரு​மானத்​துக்கு விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை​யின் 2004-ம் ஆண்டு கடிதம், பொதுத் துறை நிறு​வனம் மற்​றும் தனி​யார் துறை ஊழியர்​களின் பிள்​ளை​களுக்கு எதி​ராக சட்​ட​விரோத​மான, பகிரங்க பாகு​பாட்டை ஏற்​படுத்​தி​யது.

எனவே, பாதிக்​கப்​பட்ட, தகு​தி​யுடைய அனை​வருக்​கும் கூடு​தல் தற்​காலிகப் பணி​யிடங்​களை உரு​வாக்​கி, அவர்​களை 6 மாதங்​களுக்​குள் பணி​யமர்த்த வேண்​டும்" என்று மத்​திய அரசுக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

எனினும், இந்த தீர்ப்பை செயல்​படுத்​தாமல் முடக்​கும் நோக்​கில், மத்​திய அரசு மீண்​டும் உச்ச நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ளது. எனவே இது தொடர்​பான மனுவை மத்​திய அரசு திரும்​பப் பெற்​று, நிலு​வை​யில் உள்ள தேர்​வர்​களுக்கு உடனடி​யாக கூடு​தல் தற்​காலிகப் பணி​யிடங்​கள் மூலம் பணி ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

உச்ச நீதி​மன்​றம் விதித்த 6 மாத காலக்​கெடுவை கண்​டிப்​புடன் பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT