தமிழகம்

மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்க ஆளுநர் அர்லேகர் முயற்சி: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: “மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுகளைக் கவிழ்த்​து, தனக்​குக் கைப்​பாவை​யாக வைக்​கும் ஓர் அரசை உரு​வாக்​கு​வது​தான், அமித்​ஷா​வின் திட்​டம். அதற்​கான முதல் படியை ஆளுநர் அர்​லேகர் செய்ய ஆரம்​பித்​திருக்​கிறா​ரா?” என தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் கேள்​வி யெழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் சென்​னை, சத்​தி​யமூர்த்தி பவனில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அயோத்தி ராமர் கோயி​லில் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை ஊழலும் திருட்​டும் நடை​பெற்​றுள்​ளது. கடவுள் நம்​பிக்​கை​யுடைய பக்​தர்​கள் மற்​றும் சாமானியர்​களுக்கு இது மிகப்​பெரிய அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதற்கு பொறுப்​பேற்​று, பிரதமர் மோடிக்கு நெருக்​க​மானவர்​களான அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய், அறங்​காவலர் அனில் மிஷ்ரா ஆகியோர் உடனடி​யாகப் பதவி

வில​கி​யிருக்க வேண்​டும். ஆனால், இதுகுறித்​து பிரதமர் மோடி, நைனார் நாகேந்​திரன், ஹெச்​.​ராஜா உள்​ளிட்​டோர் மவுனம் காப்​பது ஏன்? இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசு உடனடி​யாக சிறப்​புப் புல​னாய்​வுக் குழுவை (SIT) அமைத்து விசா​ரிக்க வேண்​டும்.

தமிழகத்​தில் கோயில்​கள் அரசு கட்​டுப்​பாட்​டில் இருப்​பதால்​தான் வெளிப்​படைத்​தன்மை நில​வு​கிறது. சட்​டப்​பேர​வை​யில் கேள்வி எழுப்​ப​வும், தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் மூலம் கணக்​கு​களைச் சரி​பார்க்​க​வும் முடிகிறது. ஆனால், ராமர் கோயில் போன்​றவை தனி​யார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மாக இருக்​கிறது.

ஆர்​டிஐ வரம்​பிற்​குள் வராத​தால், அங்கு நடக்​கும் தவறுகளைக் கேள்வி கேட்க முடிவ​தில்​லை. எனவே​தான் கோயில் சொத்​துக்​களைத் தனி​யாரிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ், பாஜக சதி செய்​கின்​றன.

ஆளுநர் அர்லேகர் பாஜக​வினுடைய ஏஜென்ட்​டாகச் செயல்​படு​கிறார். கூட்​டணி பேசுவது போல 3 கட்​சிகளை பார்த்​திருக்​கிறார். ஒரே மாதிரி​யான புகாரை ஜெராக்ஸ் போட்டு வாங்​கி​யிருக்​கிறார்.

எனக்கு அதிர்ச்​சி​யாக இருந்​தது; இதெல்​லாம் ஆளுநர் செய்​யும் வேலை​யா? ஆளுநர் அலு​வல​கத்​தை, ‘கமலால​யம்’ என்றே பெயர் மாற்​றி​யிருக்​கலாம். அமித்​ஷா​வின்திட்​டம் என்​பது, மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுகளைகவிழ்த்​து, தனக்​குக் கைப்​பாவை​யாக வைக்​கும் ஒரு அரசை உரு​வாக்​கு​வது​தான்.

அதற்​கான சதித் திட்​டத்​தின் முதல் படியை ஆளுநர் செய்ய ஆரம்​பித்​திருக்​கிறாரா என்​பது​தான் கேள்​வி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​திற்​கான நிதிப் பங்​கீட்டை 90:10 என்ற விகிதத்​தில் இருந்து 60:40 ஆக மத்​திய அரசு குறைத்​துள்​ளது.

இதனால் தமிழக அரசுக்​குக்கூடு​தலாக ரூ.5,000 கோடி நிதிச்​சுமை ஏற்​பட்​டுள்​ளது. கிராமப்​புற பொருளா​தா​ரத்தை உடைத்​து, ஏழைகளை நகரங்​களுக்கு விரட்​டு​வதே மோடி​யின் நோக்​கம்.

நாளை (இன்​று) நடை​பெறும் காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தில், உள்​ளாட்​சித் தேர்​தல் மற்​றும் கட்​சி​யின் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​படும்.

தவெக, காங்​கிரஸ், விசிக உள்​ளடக்​கிய தற்​போதைய மதச்​சார்​பற்ற சமூக நீதிக்​கானக் கூட்​டணி மக்​கள் நலனுக்​கான நீண்ட காலகூட்​ட​ணி​யாகத் தொடரும். பாஜக, ஆர்​எஸ்​எஸ் தவறுகளை துணிச்​சலோடு நெஞ்​சுக்கு நேராக எதிர்ப்​ப​தே காங்​கிரஸின்​ முதன்​மைக்​ கொள்​கை என்று அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT