இந்து சமய அறநிலையத் துறை 
தமிழகம்

கோயில்களில் கும்பாபிஷேகத்தின்போது சாற்றப்படும் அஷ்டபந்தன மருந்தில் 8 பொருட்கள் கட்டாயம்

அறநிலையத் துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: கோ​யில்​களில் கும்​பாபிஷேகத்​தின்​போது சாற்​றப்​படும் அஷ்டபந்தன மருந்​தில் 8 மூலப்​பொருட்​கள் கட்​டா​யம் இருக்க வேண்​டும். குறைந்​தது 12 ஆண்​டு​கள் வரை சிலைகளை நிலைநிறுத்​தும் தன்மை கொண்​ட​தாக இருக்க வேண்​டும் என்று இந்து சமய அறநிலை​யத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் டி.ஜி.​வினய் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: கோயில்​களில் 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடை​பெறும் கும்​பாபிஷேகத்​தின்​போது அஷ்டபந்தன மருந்து சாற்​றப்​படு​கிறது. கொம்​பரக்​கு, சுக்​கான் தூள், குங்​கி​லி​யம், கற்​கா​வி, செம்​பஞ்​சு, சாதிலிங்​கம், தேன்​மெழுகு, வெண்​ணெய் ஆகிய 8 மூலப்​பொருட்​கள் கொண்ட கலவை​யாக இந்த மருந்து இருக்க வேண்​டும். குறைந்​தது 12 ஆண்​டு​கள் வரை சிலைகளை நிலைநிறுத்​தும் தன்மை கொண்​ட​தாக இருக்க வேண்​டும்.

சேதமடைந்த அல்​லது பின்​ன​மான சிலைகளை அகற்​றி​விட்டு புதிய சிலைகளை நிறு​வுவதற்கு முறை​யான அனு​மதி பெற வேண்​டும். அகற்​றப்​பட்ட பழைய சிலைகளை கோயில் வளாகத்​திலேயே பாது​காப்​பாக வைக்க வேண்​டும்.

புதிய சிலைகளை நிறு​வும்​போது, பீடத்​தில் ஏற்​கெனவே கண்​டெடுக்​கப்​பட்ட தங்​கம், வெள்ளி மற்​றும் நவரத்​தினங்​கள் பற்​றிய விவரங்​களை உரிய பதிவேட்​டில் பதிவு செய்​து, பீடத்​தில் மீண்​டும் வைக்க வேண்​டும். மண்டல இணை ஆணை​யர், உதவி ஆணை​யர், சரி​பார்ப்பு அலு​வலர் முன்​னிலை​யில் அஷ்டபந்தன மருந்து சாற்​றும் பணி​கள் நடை​பெற வேண்​டும்.

இப்​பணி​கள் தொடங்​கு​வது முதல் நிறைவடைவது வரை முழு​மை​யாக புகைப்​படம், வீடியோ எடுத்து ஆவணப்​படுத்த வேண்​டும். இந்து சமய அறநிலை​யத் துறை சட்ட விதி​களுக்​கும், ஆகம நெறி​முறை​களுக்​கும் உட்​பட்டு இந்த நிகழ்வு நடை​பெற வேண்​டும்.

உபய​தா​ரர் செல​வில் இப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டால், அவர்​களது சம்​மதக் கடிதம் இணைக்​கப்பட வேண்​டும். பணி​கள் முடிந்​தவுடன், அதுகுறித்த விரி​வான அறிக்​கையை புகைப்​படங்​கள், வீடியோ ஆதா​ரத்​துடன் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT