இளையாத்தக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிபாய்ந்த காளை

 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் ஒருவர் உயிரிழப்பு: 25 பேர் காயம்

இ.ஜெகநாதன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இளையாத்தக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி, கருவேம்பு செல்ல அய்யனார் கோயில், நாச்சாங்கருப்பர் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு, ஊர்வலமாக கிராம மக்கள் மஞ்சுவிரட்டுத் திடலுக்கு சென்றனர்.

தொழுவிலிருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு வழங்கி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தொழுவிலிருந்து திருப்பத்தூர், கொளுஞ்சிப்பட்டி, நெடுமறம், கீழச்சிவல்பட்டி, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் அவிழ்க்கப்பட்டன.

கண்மாய், வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (55) என்பவர் உயிரிழந்தார். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக தெற்கு இளையாத்தக்குடி கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் அளித்த புகாரின்பேரில், இளையாத்தக்குடியைச் சேர்ந்த 10 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

SCROLL FOR NEXT