ஜீவன் சிங்

 
தமிழகம்

பல மாநிலங்களில் ஜெயின் கோயில்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், தெலங்​கா​னா, கர்​நாடகா மாநிலங்​களில் உள்ள ஜெயின் கோயில்​களை குறி​வைத்து தொடர் திருட்​டில் ஈடு​பட்ட முகமூடித் திருடன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை யானைக்​க​வுனி, மின்ட் தெரு​வில் பிரபல​மான ஜெயின் கோயில் உள்​ளது.

கடந்த ஆண்டு பிப்​.14-ம் தேதி இந்த கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர், சாமி சிலைகளில் அணி​வித்​திருந்த 10 கிலோ எடை கொண்ட 5 வெள்ளி கிரீடங்​கள், சாமி சிலைகளின் நெற்​றி​யில் வைக்​கப்​பட்​டிருந்த 600 கிராம் எடை கொண்ட தங்​கப்​பட்​டைகளை திருடி​விட்டு தப்​பி​னார்.

          

மறு​நாள் காலையில் கோயில் நிர்​வாகி​கள், இது தொடர்​பாக யானைக்​க​வுனி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடம் மற்​றும் அதைச் சுற்றி பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு செய்​தனர்.

இதில் முகமூடி அணிந்து இருட்​டில் டார்ச் லைட் அடித்​த​படி கோயிலுக்​குள் புகுந்து திருட்​டில் ஈடு​பட்​டது மகா​ராஷ்டிரா மாநிலம், புனே​யில் உள்ள ஹவாளி பகு​தி​யில் வசித்த ஜீவன் சிங் (60) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்​படை போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

திருட்டு நகைகளை வாங்​கிய​தாக அதே மாநிலம் வாத்​வானியைச் சேர்ந்த ராஜ்பவு ரத்​தோர் (30) என்​பவரை​யும் கைது செய்​தனர். விசா​ரணை​யில், ஜீவன் சிங் யானைக்​க​வுனி ஜெயின் கோயி​லில் திருடியதைப்​போல், தெலங்​கானா மாநிலத்​தில் உள்ள 2 ஜெயின் கோயில்​கள், கர்​நாட​கா​வில் உள்ள ஒரு ஜெயின் கோயிலும் திருட்​டில் ஈடு​பட்​டுள்​ளார்.

கர்​நாடகா வழக்​கில் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் வெளியே வந்​த ​போது​தான் சென்​னை​யில் உள்ள கோயி​லில் கைவரி சையை காட்​டி​யுள்​ளார். அது​மட்​டும் அல்​லாமல் போலீஸ் தன்னை அடை​யாளம் கண்டு கைது செய்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அவர், இருப்​பிடத்தை அடிக்​கடி மாற்றி வந்​துள்​ளார்.

மேலும் தமிழகத்​தில் சென்னை மட்​டும் அல்​லாமல் சேலம், செங்​கல்​பட்​டில் உள்ள ஜெயின் கோயில்​களி​லும்​ திருட்​டில்​ ஈடு​பட்​டுள்​ளார்​ என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT