தமிழகம்

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை மாலத்தீவு கடற்படை சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்​துக்​குடி​யில் இருந்து மீன்​பிடிக்​கச் சென்ற 25 மீன​வர்​களை, 3 விசைப்​படகு​களு​டன் மாலத்​தீவு கடற்​படை​யினர் சிறைபிடித்​துள்​ளனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம், தரு​வை​குளத்​தைச் சேர்ந்த ரமேஷ்கு​மார், மைக்​கேல் ஜான்​சங்​கர், சூசை பாக்​கி​யம் ஆகிய மூன்று பேரும் விசைப்​படகு​கள் வைத்து மீன்​பிடி தொழில் செய்து வரு​கின்​ற​னர். இவர்​களுக்கு சொந்​த​மான 3 செவுள்​வலை விசைப்​படகு​கள் ஆழ்​கடலில் மீன்​பிடிப்​ப​தற்​காக கடந்த 1-ம் தேதி அதி​காலை தரு​வை​குளம் கடற்​கரை​யில் இருந்து புறப்​பட்​டுச் சென்​றன.

நேற்று அதி​காலை மாலத்​தீவு அருகே உள்ள பகு​தி​யில் இவர்​கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த மாலத்​தீவு கடற்​படை​யினர் தடை செய்​யப்​பட்ட பகு​தி​யில் மீன் பிடித்​த​தாக கூறி, 3 செவுள்​வலை விசைப்​படகு​களை​யும் சிறைபிடித்​தனர்.

இதில், ரமேஷ்கு​மாருக்கு சொந்​த​மான படகில் தரு​வை​குளத்​தைச் சேர்ந்த நிக்​சன், ஜாக்​சன், சால்​டன், ராயப்​பன், சுரேஷ், ராம​நாத​புரம் மாவட்​டம் ஏர்​வாடியைச் சேர்ந்த அஜித், ராமச்​சந்​திரன், பால்​ராஜ், தூத்​துக்​குடி தாள​முத்​துநகரைச் சேர்ந்த இசக்​கி​ராஜா ஆகிய 9 பேர் இருந்​தனர். இது​போல், மைக்​கேல் ஜான்​சங்​கரின் செவுள்​வலை விசைப்​படகில் தரு​வை​குளத்​தைச் சேர்ந்த அமல்​ராஜ், ஷாம், ராஜேஷ், செல்​வம், தாள​முத்​துநகரைச் சேர்ந்த ஜெகதீஷ், ஜெகன், இஸ்​ரேல் கண்​ணன், புலி ஆகிய 8 பேர் இருந்​தனர்.

சூசை​பாக்​கி​யத்​துக்கு சொந்​த​மான படகில் தரு​வை​குளத்​தைச் சேர்ந்த அந்​தோணி மிக்​கேல், பரலோக நிஷாந்த், ஷியாம் ஜோஸ்​வா, அந்​தோணி அஜய், அந்​தோணி திசன், வேம்​பாரைச் சேர்ந்த அஜய், ராம​நாத​புரம் மாவட்​டம் நரிப்​பையூரைச் சேர்ந்த டைசன், புதுச்​சேரியைச் சேர்ந்த கண்​ணன் ஆகிய 8 பேர் இருந்​தனர்.

மொத்​தம் 25 மீன​வர்​களை​யும், அவர்​கள் ஓட்​டிச்​சென்ற 3 படகு​களை​யும், படகில் இருந்த வலை​கள், மீன்​கள் ஆகிய​வற்​றை​யும் சிறைப்​பிடித்​து, மாலத்​தீவு கடற்​படை​யினர் அந்​நாட்​டுக்கு கொண்டு சென்​ற​னர். மீன​வர்​களை​யும், விசைப்​படகு​களை​யும் மீட்​கு​மாறு, மத்​திய மாநில அரசுகளுக்​கு, மீன​வர்​களின் உறவினர்​களும், தரு​வை​குளம் கிராம மக்​களும் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT