புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
அப்போது பாதுகாப்பு, செமி கண்டக்டர், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சபா மாகாணம் கோட்டா கினபாலு பகுதியில் இந்திய துணைத் தூதரகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் கூறும்போது, “பிரதமர் மோடி மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்குமாறு பல்வேறு தரப்பினர் எனக்கு தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்” என்றார்.
பாஜக மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி சமூக வலைதளத்தில், வெளியிட்ட பதிவில், “சர்வதேச அளவில் பிரதமர் மோடி அலை பரவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.