சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில் ஆறுமுகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கிராம சபைகளைப் போல்மக்கள் பங்கேற்புள்ள ஜனநாயகத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உறுதிப்படுத்துவது ஏரியா சபைக் கூட்டங்களாகும்.
இக்கூட்டங்கள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிர திநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குடிநீர், சாலைவசதி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அந்தந்தப் பகுதிப் பிரச்சினைகள் குறித்து விவாதித்து திட்டமிட-தீர்வு காண வழிவகுக்கிறது.
ஆனால், ஏரியா சபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பானது இதுவரை வெளியிடப்படாதது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் கவனித்து வரும் நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறை, விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 15 முதல் ஒவ்வொரு வார்டிலும் ஏரியா சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.