முதல்வர் விஜய்

 
தமிழகம்

மதுராந்தகம் தொகுதியில் வாக்கு கேட்டு முதல்வர் விஜய் சாலை வலம் - மக்கள் உற்சாக வரவேற்பு

தமிழினி

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் சாலை வலம் (ரோட் ஷோ) மேற்கொண்டார். அவருக்கு தவெக-வினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று சாலைவலம் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சாலைவலத்தை தொடங்கினார். அங்கிருந்து மதுராந்தகம் வரை சுமார் 39 சந்திப்புகளில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

மாமண்​டூர் அடுத்து, புக்​கத்​துறை, பழையனூர், படாளம், ஜானகிபுரம், மேல​வலம்​பேட்​டை, கருங்​குழி, மது​ராந்​தகம் புறவழிச்​சாலை, மோச்​சேரி, மொரப்​பாக்​கம், தண்​டலம், பெரும்​பாக்​கம், எல்​.எண்​டத்​தூர், செம்​பூண்​டி, பசுவங்​கரணை, கீழாமூர், ராமாபுரம், மோகல்​வாடி, பொற்​பனங்​கரணை, எலப்​பாக்​கம், ஆனைக்​குன்​னம், கீழ் அத்​தி​வாக்​கம், கடமலைபுத்​தூர், பெரும்​பேர்​கண்​டிகை, தேன்​பாக்​கம், மேல்​மரு​வத்​தூர் கோயில் சந்​திப்​பு, சோத்​துப்​பாக்​கம், மாம்​பாக்​கம் உட்​பட 39 இடங்​களில் வாக​னம் மூலம் முதல்வர் விஜய் மக்​களை சந்​தித்து வாக்கு சேகரிக்கிறார்.

SCROLL FOR NEXT