தமிழகம்

மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக்.6-ல் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​த​தால் காலி​யான மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என்று இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு இரண்​டிலும் முதல்​வர் விஜய் வெற்றி பெற்​றார். முதல்​வ​ராகப் பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

பின்​னர், சி.​விஜய​பாஸ்​கர் (விராலிமலை), எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகிய 6 அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.

இதில், திருச்சி கிழக்​கு, விராலிமலை, கரூர், பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​கள் தொடர்​பான தேர்​தல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்நிலையில், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்​ளது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட மரகதம் குமர​வேல் 69,298 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். தவெக வேட்​பாளர் எழில் கேத்​ரின் 62,090, திமுக வேட்​பாளர் அமுலு பொன்​மலர், 59,838, நாதக வேட்​பாளர் ஜானகி​ராமன் 4,950 வாக்​கு​களை பெற்​றனர். எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்த மரகதம் குமர​வேலுக்கு மாநில துணை பொதுச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், அத்​தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் போட்​டி​யிடு​வாரா, ஏற்​கெனவே போட்​டி​யிட்ட எழில் கேத்​ரினுக்கு வாய்ப்பு கிடைக்​குமா என்ற எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. தாராபுரம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட சத்​தி​ய​பாமா 81,100 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார்.

திமுக வேட்​பாளர் இந்​தி​ராணி 64,373, கவுரி சித்ரா 46,438, நாதக வேட்​பாளர் திவ்யா 6,026 வாக்​கு​களைப் பெற்​றனர். எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்த சத்​தி​ய​பா​மா, திருப்​பூர் கிழக்கு மாவட்ட இணைச் செய​லா​ள​ராக உள்​ளார். தாராபுரம் தொகு​தி​யில் சத்​தி​ய​பா​மாவை வேட்​பாள​ராக அறிவிக்க அதி​கம் வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக அலையை மீறி மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களி​லும் அதி​முக வெற்றி பெற்​றது. அதனால், அந்த 2 தொகு​தி​களில் மீண்​டும் வெற்றி பெறும் முனைப்​பில் அதி​முக உள்​ளது. திமுக​வும் வேட்​பாளர்​களை நிறுத்த முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, இடைத்​தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் நாளை (செப்​.9) தொடங்​கு​கிறது. செப்​.16-ம் தேதி மனு​தாக்​கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடை​பெறுகிறது. மனுக்​களை திரும்​பப் பெற 19-ம் தேதி கடைசி நாள். அக்​.6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறும். வாக்கு எண்​ணிக்கை அக்​.9-ம் தேதி நடக்​கிறது. அனைத்​து தொகு​தி​களி​லும்​ தேர்​தல்​ நடத்​தை வி​தி​கள்​ அமலுக்​கு வந்​துள்​ளன.

SCROLL FOR NEXT