தமிழகம்

அனைத்து மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: அனைத்து மாவட்​டங்​களி​லும் போதை மறு​வாழ்வு மையங்​களை அமைக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பி.​ராம்​கு​மார் ஆதித்​தன் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் மதுப்​பழக்​கம் சமூகத்​தைப் பெரிதும் பாதிக்​கிறது. மது​வுக்கு அடிமை​யா​வோரின் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரிக்​கிறது. அனைத்து அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட, தாலுகா தலைமை மருத்​து​வ​மனை​களில் மது ஒழிப்பு மறு​வாழ்வு மையங்​களை திறக்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் ஆண்​டுக்கு ஒரு​முறை சிறப்பு மருத்​துவ முகாம்​களை நடத்த வேண்​டும் என குறிப்​பிட்​டிந்​தார்.

          

இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், எம்​.ஜோ​தி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. அப்​போது அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட பதில் மனு​வில், ‘மதுப்​பழக்​கத்​துக்கு எதி​ரான விழிப்​புணர்வை ஏற்​படுத்த ஆண்​டு​தோறும் ரூ.3 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது. மது​வால் பாதிக்​கப்​பட்​டோரின் மறு​வாழ்​வுக்​காக ரூ.5 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆட்​சி​யர் தலை​மை​யில் காவல் கண்​காணிப்​பாளர் மற்​றும் கல்வி அலு​வலர்​களை உள்​ளடக்​கிய மாவட்ட அளவி​லான குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 2024-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை​யின்​படி தற்​போது 25 அரசு மருத்​து​வ​மனை​களில் மறு​வாழ்வு மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ளன என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: தமிழகத்​தில் 25 மையங்​கள் ஏற்​கெனவே அமைக்​கப்​பட்​டுள்​ளன. மீத​முள்ள மாவட்​டங்​களி​லும் போதை மறு​வாழ்வு மையங்​களை அமைக்​கும் பணி​களை விரை​வாக முடிக்க வேண்​டும் என உத்​தர​விட்டு வழக்கை முடித்து வைத்​தனர்​.

SCROLL FOR NEXT