தமிழகம்

மதுரை எய்ம்ஸில் 47% கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது: ஆர்டிஐயில் தகவல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் தான் நடைபெற்றுள்ளது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

          

அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலர் தர்ம் பீர் குமார் சிங் பதில் அளித்துள்ளார்.

அதில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 % நிறைவு பெற்றுள்ளது எனவும், மதுரை எய்ம்ஸ் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடி எனவும், அதில் ரூ.471.02 கோடி மத்திய பட்ஜெட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும்” தலைமை பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT